ஹைட்ரோகார்பன் எதிர்ப்புக் குழு போராட்டத் தலைவர் கரோனாவுக்கு பலி
- Namvazhvu Tube
- Aug 25, 2020
- 1 min read

கரோனா தொற்று பாதிப்பால் திருக்காரவாசல் ஹைட்ரோ கார்பன் எதிர்ப்புப் போராட்டக் குழுத் தலைவர் எஸ்.தியாகராஜன்(72) உயிரிழந்தார்.தமிழக காவிரி விவசாயிகள் சங்கம் சார்பில் திருக்காரவாசல் எஸ்.தியாகராஜன் தலைமையில் போராட்டக்குழு அமைக்கப்பட்டது.
போராட்டத்தில் ஈடுபட்ட எஸ்.தியாகராஜனுக்கு கரோனா தொற்று ஏற்பட்டு கடந்த ஒரு வார காலமாக திருவாரூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி செவ்வாய்க்கிழமை அவர் உயிரிழந்தார்.
Source: https://m.dailyhunt.in/news







Comments