top of page

திருப்பத்தூர்- வங்கியை முற்றுகையிட்ட வாடிக்கையாளர்கள்- நாட்றம்பள்ளியில் பரபரப்பு



திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி பகுதியில் இயங்கிவரும் இந்தியன் வங்கியில், வாடிக்கையாளர்களுக்கு சரிவர ஏடிஎம் கார்டு வழங்கவில்லை என கூறப்படுகிறது. இது தொடர்பாக வாடிக்கையாளர்களின் கேள்விக்கு பதில்அளிக்காத வங்கி மேலாளர், வாடிக்கையாளர்களை தரக்குறைவாக பேசியதாக கூறப்படுகிறது. இதையடுத்து 100க்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்கள் வங்கி கிளையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இது குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார், பொதுமக்களை சமாதானம் செய்யும் பணியில் ஈடுபட்டனர்.

Comments


bottom of page