மக்களுக்கு உடனடி மருத்துவ சேவை. புதிதாக 108 ஆம்புலன்ஸ்களை தொடக்கி வைத்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி!
- Namvazhvu Tube
- Sep 2, 2020
- 1 min read

நோயாளிகளை மருத்துவமனைக்கு உரிய நேரத்தில் அழைத்துச் செல்வதற்காக, அவசர ஊர்தி பெரிதும்பயனுள்ளதாக உள்ளது. ஏற்கனவே, தமிழகம் முழுவதும் 1,005 அவசரக்கால ஊர்திகள் இயக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், கொரோனா காலத்தில் ஏழை, எளிய மக்களுக்கு, உடனடி மருத்துவ சேவை புரிய வேண்டும் என்பதற்காகவும், மலையோர மற்றும் கிராமப்புற மக்களுக்கும் அதிவிரைவு மருத்துவ சேவை கிடைத்திட வேண்டும் என்பதற்காகவும் ஆம்புலன்ஸ் வாங்க முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டிருந்தார். இதன்படி புதிதாக 118 ஆம்புலன்ஸ்கள் வாங்கப்பட்டுள்ளன. அரசு இதற்காக 20.25 கோடி ஒதுக்கியது. இதன் கீழ் 90 ஆம்புலன்ஸ் வாங்கப்பட்டுள்ளது.
Source: https://m.dailyhunt.in/news







Comments