வந்தே பாரத் திட்டம்: மதுரை விமான நிலையத்தில் 11 விமானங்கள் தரையிறக்கப்படும்!
- Namvazhvu Tube
- Aug 30, 2020
- 1 min read

கொரோனா பாதிப்பால் வெளிநாடுகளில் சிக்கி தவிக்கும் இந்தியர்கள் நாடு திரும்ப முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. அவர்களை மீட்க மத்திய அரசு வந்தே பாரத் திட்டத்தை தொடங்கி வைத்துள்ளது. இந்த திட்டத்தின் அடிப்படையில் நூற்றுக்கணக்கான இந்தியர்கள் துபாய், சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளில் இருந்து தொடர்ந்து மீட்கப்பட்டு வருகின்றனர்.இந்நிலையில் வந்தேபாரத் திட்டத்தின் கீழ் செப்டம்பர் மாதத்தில் மதுரை விமான நிலையத்தில் 11 விமானங்கள் தரையிறக்கப்படும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.ஐக்கிய அரபு அமீரகம், துபாய், சிங்கப்பூர், நாடுகளிலிருந்து வரும் விமானங்கள் மதுரையில் தரையிறக்கவுள்ளன.
Source: https://m.dailyhunt.in/news







Comments