top of page

விவசாயியை தொழில் முனைவோராக மாற்றுவதே குறிக்கோள்: பிரதமர் மோடி பேச்சு


தமிழகத்தில் ஹைட்ரோ கார்பன், மீத்தேன் உள்ளிட்ட திட்டங்களால் விவசாய நிலங்கள் அழியும் விளிம்பில் இருக்கிறது. இதற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்து, இது போன்ற திட்டங்களை அனுமதிப்பதால் மத்திய அரசுக்கு விவசாயிகள் கடும் எதிர்ப்பை தெரிவிக்கின்றனர். இருப்பினும், விவசாயிகளை பாதுகாக்க காப்பீடு திட்டம் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்து வருகிறது.இந்த நிலையில் விவசாயியை தொழில் முனைவோராக மாற்றுவதே விவசாயத்தில் தன்னிறைவு பெறுவதன் குறிக்கோள் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். மேலும், விவசாயம், விவசாயிகள் தொழில் வடிவத்தில் முன்னேறினால் கிராமங்களில் சுய வேலை வாய்ப்புகள் அதிகரிக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.

Comments


bottom of page