வாராக் கடன் குறைந்தது, லாபம் வந்தது.. சந்தோஷத்தில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி.
- Namvazhvu Tube
- Aug 23, 2020
- 1 min read

பொதுத்துறை வங்கியான இந்தியன் ஓவர்சீஸ் வங்கி (ஐ.ஓ.பி.) தனது கடந்த ஜூன் காலாண்டு நிதி முடிவுகளை வெளியிட்டுள்ளது. 2020 ஜூன் காலாண்டில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி தனிப்பட்ட முறையில் நிகர லாபமாக ரூ.121 கோடி ஈட்டியுள்ளது. சென்ற ஆண்டின் இதே காலாண்டில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி ரூ.342.08 கோடியை நிகர இழப்பாக சந்தித்து இருந்தது.
2020 ஜூன் காலாண்டில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் மொத்த வருவாய் ரூ.5,233.63 கோடியாக உயர்ந்துள்ளது. இது சென்ற ஆண்டின் இதே காலாண்டைக் காட்டிலும் 21 சதவீதம் அதிகமாகும். 2019 ஜூன் காலாண்டில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் மொத்த வருவாய் ரூ.5,006.48 கோடியாக இருந்தது. கடந்த காலாண்டில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் வட்டி வருவாய் சிறிது குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.மேலும் இதே காலத்தில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் நிகர வாராக் கடன் 5.44 சதவீதத்திலிருந்து 5.10 சதவீதமாக குறைந்துள்ளது.
Source: https://m.dailyhunt.in/news







Comments