வாடகை வீடு பிடித்து தருவதாக கூறி ரூ.2 கோடி மோசடி - கணவன், மனைவி உள்பட 3 பேர் கைது
- Namvazhvu Tube
- Aug 28, 2020
- 1 min read

சென்னை புறநகர் பகுதிகளான சேலையூர், நன்மங்கலம், பம்மல், தாம்பரம், புழுதிவாக்கம் ஆகிய பகுதிகளில், ஒப்பந்த அடிப்படையில் வீடுகள் வாடகைக்கு பிடித்து தருவதாக கூறி ஒரு கும்பல் 2 கோடி ரூபாய் வரை ஏமாற்றியுள்ளது. இவர்களிடம் பணத்தை கொடுத்து 100 பேர் ஏமாந்துள்ளனர்.
முதலில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுக்கும் கும்பல், அங்கு சென்ற பின்பு, வீடு குத்தகைக்கு இருப்பதாக இணையதளங்களில் விளம்பரம் செய்துள்ளனர். அதை நம்பி வருபவர்களிடம், வீட்டு உரிமையாளருக்கு தெரியாமல், குத்தகைக்கு விட்டு பணத்தை சுருட்டியுள்ளனர். இப்படி சுருட்டிய பணத்தில் படம் எடுத்துள்ளதாகவும் போலீசார் கூறினர்.ஒரு கும்பலிடம் பணத்தை இழந்த, 100 பேர் அளித்த புகாரின் பேரில், மத்திய குற்றப்பிரிவு போலீசார், மோசடியில் ஈடுபட்ட சேலம் அயோத்தியாபட்டணத்தைச் சேர்ந்த விக்னேஷ் (வயது 32), அவரது மனைவி காயத்ரி (30) மற்றும் ஈரோட்டை சேர்ந்த பிரகாஷ் (27) ஆகிய 3 பேரையும் கைது செய்தனர்.
Source: https://m.dailyhunt.in/news







Comments