top of page

'ரசிகர்களின் பிரார்த்தனை அப்பாவை மீட்டுக் கொண்டு வரும்'.எஸ்.பிபியின் உடல்நிலை குறித்து சரண் வீடியோ!


பிரபல பாடகர் எஸ்.பி பாலசுப்பிரமணியத்துக்கு கொரோனா உறுதியானதால், அவர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். கடந்த சில நாட்களாக அவரது உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும் அவருக்கு எக்ஸ்மோ சிகிச்சை அளிக்கப்படுவதாகவும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. எஸ்பிபி விரைவில் குணமடைந்து மீண்டும் மக்களை மகிழ்விக்க வர வேண்டும் என கோடான கோடி மக்கள் பிரார்த்தனை செய்து வருகின்றனர்.

எஸ்.பிபி மீண்டு வர வேண்டும் என்பதற்காக நடிகர்களும், நடிகைகளும், ரசிகர்களும் இணைந்து இன்று மாலை 6 மணிக்கு கூட்டு பிரார்த்தனை நடத்த உள்ளனர். அந்த கூட்டுப்பிரார்த்தனையில் தானும் கலந்து கொள்ள உள்ளதாக ரஜினி தெரிவித்திருந்தார். பாடும் நிலா… எழுந்துவா! கூட்டுப் பிரார்த்தனை செய்வோம்… எஸ்பிபியை மீட்டெடுப்போம் என்றும் குறிப்பிட்டிருந்தார்.


இந்த நிலையில், எஸ்.பிபியின் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாகவே இருப்பதாகவும் மக்களின் பிரார்த்தனை அப்பாவை மீட்டுக் கொண்டு வரும் என எஸ்பிபி மகன் சரண் வீடியோ வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில், அப்பாவுக்காக பிரார்த்தனைக்கு ஏற்பாடு செய்த அனைவரும் நன்றி என்றும் அவருக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் சரண் கூறியுள்ளார்.


Comments


bottom of page