top of page

ரூ.10க்கு ஆசைப்பட்டு ரூ.2 லட்சத்தை இழந்த ரெஸ்டாரன்ட்


மும்பை: உணவகம் ஒன்றில், ஆறு ஆண்டுகளுக்கு முன்பு, 10 ரூபாய் கூடுதல் விலை வைத்து ஐஸ்க்ரீம் விற்பனை செய்த ரெஸ்டாரன்ட்டிற்கு ரூ.2 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.ரூ.165 விலையுள்ள ஐஸ்க்ரீம்-க்கு ரூ.175 என இருந்ததால் கூடுதல் விலைக்கு விற்பது குறித்து அதிர்ச்சியடைந்து வழக்கு தொடர்ந்தார்.வழக்கில் உணவகம் சார்பில், 'ஐஸ்க்ரீமை பாதுகாத்து வைப்பதற்கு செலவு ஏற்படுவதாகவும், ஐஸ்க்ரீம் கடைக்கும் உணவகத்திற்கும் வித்தியாசம் உள்ளது,' என பதிலளித்தனர்.ஆறு ஆண்டுகளாக நீடித்த இந்த வழக்கில், உணவகத்திற்கு அபராதம் விதித்து நுகர்வோர் தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.10 ரூபாய் கூடுதல் விலை வைத்து ஐஸ்க்ரீம் விற்பனை செய்ததற்காக ரூ.2 லட்சம் அபராதம் விதிக்கப்படுவதாக உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், நுகர்வோருக்கும் இழப்பீடு வழங்கவும் நுகர்வோர் தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.

Comments


bottom of page