மருத்துவமனையில் இருந்து எஸ்கேப் ஆன கொரோனா நோயாளி; தேடுதல் வேட்டை தீவிரம்
- Namvazhvu Tube
- Aug 21, 2020
- 1 min read

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்துக் கொண்டே வருகிறது. கொரோனா உறுதி செய்யப்படுபவர்களுள் பலர் மருத்துவமனையிலும் பலர் வீடுகளிலேயேயும் தனிமை படுத்தப்படுகின்றனர். தொடர்ந்து 14 நாட்கள் அவர்கள் தனிமையில் இருப்பதால், உடல் ரீதியாக மட்டுமில்லாமல் மனதளவிலும் பாதிக்கப்படுகின்றனர். இதனால் பல மருத்துவமனைகளில் கொரோனா நோயாளிகளின் மன அழுத்தத்தை குறைக்கும் விதமாக நடன பயிற்சி, யோகா பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகிறது. இதனிடையே பலர் குடும்பத்தை பிரிந்திருக்கும் மன அழுத்தத்தால் மருத்துவமனையிலேயே தற்கொலை செய்து கொள்வதும் நோயின் அபாயம் புரியாமல் மருத்துவமனையில் இருந்து தப்பி ஓடுவதும் தொடர்கதையாகி வருகிறது.
இந்த நிலையில் மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கொரோனா நோயாளியை காணவில்லை என புகார் எழுந்துள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த அந்த முதியவர் மருத்துவமனையில் இருந்து தப்பி ஓடிவிட்டதாக சந்தேகிக்கப்படுகிறது. இது தொடர்பாக மருத்துவமனை நிர்வாகம் போலீசாரிடம் அளித்த புகாரின் பேரில், அவரை தேடும் பணி நடைபெற்று வருகிறது. காணாமல் போன முதியவர் மூலமாக மதுரையில் பலருக்கு கொரோனா பரவும் அபாயம் நிலவி வருகிறது.
Source :https://m.dailyhunt







Comments