top of page

மகாராஷ்டிர காவல்துறையில் புதிதாக 122 பேருக்கு தொற்று : மேலும் 2 பேர் பலி


மகாராஷ்டிர காவல்துறை வெளியிட்ட அறிக்கையில்,

இன்று புதிதாக 122 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து மொத்த பாதிப்பு 14,189 ஆக உயர்ந்துள்ளது.

கரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்தவர்களில் 2 பேர் இன்று ஒரே நாளில் உயிரிழந்துள்ளதால் மொத்த பலியின் எண்ணிக்கை 144 ஆக உயர்ந்துள்ளது.

இதுவரை தொற்றில் இருந்து குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 11,423 ஆக உள்ளது. மேலும், தற்போது 2,622 பேர் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

Comments


bottom of page