top of page

கொரோனா விதிமீறல்; அபராதம் விதிக்க வருகிறது புதிய சட்டத்திருத்தம்!


சென்னையில் பாதிப்பு அதிகமாக இருந்து வந்த நிலையில் தற்போது பிற மாவட்டங்களிலும் பாதிப்பு அதிகரித்து வருகிறது.இதனிடையே 5 மாதத்துக்கும் மேலாக முடங்கி வீடுகளில் முடங்கி இருந்த மக்களுக்காக மால்கள், பூங்காக்கள் என அனைத்தையும் கட்டுப்பாடுகளுடன் திறக்க அரசு அனுமதி அளித்தது. அரசு அறிவித்துள்ள விதிமுறைகள் மற்றும் கட்டுப்பாடுகளை முறையாக பின்பற்றாதவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அரசு எச்சரிக்கை விடுத்திருந்தது. சமீபத்தில், கொரோனா விதியை மீறுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க புதிய சட்டத்திருத்தம் மேற்கொள்ள அரசு முடிவெடுத்துள்ளதாகவும் அதற்கான நடவடிக்கையை சட்டத்துறை மேற்கொண்டு வருவதாகவும் தகவல் வெளியானது.

Comments


bottom of page