top of page

மாஸ்க் அணியாதவர்களை விமானத்தில் பயணம் செய்ய தடை விதிக்கப்பட்டோர் பட்டியலில் சேர்க்க உத்தரவு!


சீனாவில் கடந்த டிசம்பர் மாதம் உருவாகிய கொரோனா வைரஸ் இந்தியாவை ஆட்டம் காண வைத்துள்ளது. இதனால் பொது போக்குவரத்து, விமான சேவை கடந்த 5 மாதங்களாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக விமானத்தில் பயணம் செய்வோர் முகாம்களில் தனிமைப்படுத்தப்பட்டு வருகின்றனர்.இந்நிலையில் மாஸ்க் அணியாதவர்களை விமானத்தில் பயணம் செய்ய தடை விதிக்கப்பட்ட பட்டியலில் சேர்க்க உத்தரவிடப்பட்டுள்ளது. தடை விதிப்பது குறித்து விமான நிலையங்களுக்கு மத்திய விமான போக்குவரத்து அமைச்சகம் உத்தரவிடப்பட்டுள்ளது. வழிமுறைகளை பின்பற்றாத பயணிகள் மீது நடவடிக்கை எடுக்கவும் வலியுறுத்தியுள்ளது.

Comments


bottom of page