top of page

மாற்றுத்திறனாளிகளுக்காக ஒரு சுய உதவிக்குழு: சேலத்தில் நம்பிக்கையூட்டும் 'நம்பிக்கை'



சேலத்தில் இயங்கிவரும் 'நம்பிக்கை வாசல் டிரஸ்ட்' என்ற அமைப்பு தனது 8-வது ஆண்டு தொடக்க விழாவை இன்று நடத்தியது. இந்த நிகழ்வில், சேலத்தில் வசிக்கும் ஆறு மாற்றுத் திறனாளிகள் ஒன்றிணைந்து, தங்களுக்கான பொருளாதார முன்னேற்றத்திற்கு வழிவகுக்கும் வகையில் ஒரு சுய உதவிக்குழுவைத் தொடங்கியிருக்கின்றனர்.

இந்த நிகழ்ச்சியில் பேசிய சேலம் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் ஸ்ரீநாத், 'மாற்றுத்திறனாளிகளின் மேம்பாட்டிற்காக ஆவின் பால் பூத், தையல் மெஷின், சக்கர நாற்காலி, கடனுதவி மானியங்கள் எனப் பல்வேறு நலத்திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது. அரசின் இணையதளத்திலேயே விண்ணப்பிக்கும் வசதிகள் இருப்பதால், மாற்றுத்திறனாளிகள் அவற்றைப் பயன்படுத்தி வாழ்க்கையில் உயர்வடைய வேண்டும்' என்றார்.

Comments


bottom of page