மாஞ்சா நூல் மூலம் காத்தாடி பறக்கவிட்டதாக 4 பேர் கைது!
- Namvazhvu Tube
- Aug 24, 2020
- 1 min read

சமீபத்தில் மூலக்கடை அருகே பைக்கில் சென்று கொண்டிருந்த மாதவன் என்று 33 வயதான இளைஞர் ஒருவர் மாஞ்சா நூல் கழுத்தறுத்ததால் படுகாயமடைந்து மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு தற்போது குணடைந்துள்ளார்.
இந்நிலையில் சென்னை புளியந்தோப்பு பகுதியில் மாஞ்சா நூல் மூலம் காத்தாடி பறக்கவிட்டதாக 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளார்கள். வடசென்னையின் முக்கிய பகுதிகளான மூலக்கடை, காசிமேடு, ராயபுரம், திருவொற்றியூா், எண்ணூா், மாதவரம் உள்ளிட்ட பகுதிகளில் மாஞ்சா நூல் வைத்திருந்த 55 பேர் கைது செய்யப்பட்டது குறிப்படத்தக்கது.
Source: https://m.dailyhunt.in/news







Comments