top of page

பிலிப்பின்ஸில் இரட்டை குண்டுவெடிப்பு: 5 வீரர்கள் பலி


தெற்கு பிலிப்பின்ஸின் ஜோலோ நகரில் உள்ள வணிக கட்டடத்தின் முன் நிறுத்தப்பட்டிருந்த இராணுவ டிரக்கை குறிவைத்து முதல் குண்டுவெடிப்பு நிகழ்த்தப்பட்டது. இந்த சம்பவத்தில் 5 வீரர்கள் பலியானதாக தி ஸ்ட்ரைட்ஸ் டைம்ஸ் நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.

இதைத்தொடர்ந்து கத்தோலிக்க தேவாலயத்தை குறிவைத்து மற்றொரு குண்டுவெடிப்பு நிகழ்த்தப்பட்டது. இருப்பினும், இரண்டாவது குண்டுவெடிப்பில் உயிரிழப்புகள் குறித்து இன்னும் கண்டறியப்படவில்லை என்று தி ஸ்ட்ரைட்ஸ் டைம்ஸ் தெரிவித்துள்ளது.

பிலிப்பின்ஸில் அடுத்தடுத்து நிகழ்ந்த குண்டுவெடிப்பு சம்பவங்களால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Comments


bottom of page