நிலக்கடலை பதப்படுத்தும் நிறுவனங்களுக்கு கடனுதவி
- Namvazhvu Tube
- Aug 30, 2020
- 1 min read

மாவட்டத்தில் நிலக்கடலை விளைபொருள்களை பதப்படுத்துதல் தொழிலில் ஈடுபட்டுள்ள மற்றும் ஈடுபடவுள்ள உணவு பதப்படுத்தும், சிறு நிறுவனங்களுக்கு மத்திய அரசின் ஆத்ஸித்பார் பாரத் அபியான் திட்டத்தின் கீழ் நடப்பு நிதியாண்டில் மானியம் வழங்க அறிவுறுத்தியுள்ளது. இதன் மூலம் சிறு பதப்படுத்தும் நிறுவனம் திட்ட மதிப்பீட்டில் அதிகபட்சம் ரூ.10 லட்சம் வரை நிதியுதவி பெற வாய்ப்புள்ளது.தனிநபர் மற்றும் குழு அடிப்படையில் உணவு பதப்படுத்தும் தொழிலில் ஈடுபட்டுள்ள சிறு நிறுவனங்களை வலுப்படுத்துதல், புதிய நிறுவனங்கள் தொடங்குதல், பொதுக் கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தித் தருதல் ஆகியவற்றுக்கு வங்கி மூலம் கடன் தொகை ஏற்பாடு செய்து தரப்படும். மேலும் வர்த்தக முத்திரை மற்றும் சந்தைப் படுத்துதலுக்கு 50 சதவீத மானியமும் வழங்கப்படும். இதற்கு தொழில்நுட்பப் பயிற்சிகளும் வழங்கப்படும். இத்திட்டம், மத்திய உணவு பதப்படுத்துதல் தொழில் துறை வழியாக தமிழ்நாடு வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை மூலம் செயல்படுத்தப்படும்.
Source: https://m.dailyhunt.in/news







Comments