top of page

நுரையீரலில் ரத்தக்கசிவு எஸ்.பி.பி மிகவும் கவலைக்கிடம்!


தென்னிந்திய மொழிகளில் மிகவும் புகழ்பெற்ற திரைப்பட பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்துக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அவர் சென்னை சூலைமேட்டில் உள்ள எம்.ஜி.எம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

தினமும் அவருடைய உடல்நிலை குறித்து அவரது மகன் எஸ்.பி.பி சரண் வீடியோ மூலமாகவும் மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை மூலமாகவும் வெளியிட்டு வருகிறார்கள்.

தற்போது பாடகர் எஸ்.பி.பியின் உடல்நிலை தற்போது மிகவும் கவலைக்கிடமாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வெண்டிலேட்டர், எக்மோ கருவிகளோடு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் சற்றுமுன் திடீரென நுரையீரலில் ரத்தக்கசிவு ஏற்பட மருத்துவர்கள் அதிர்ச்சி அடைத்துள்ளனர்.


Source: https://m.dailyhunt

Comments


bottom of page