நான்கு நாட்களுக்கு மட்டுமே நடைபெறும் சட்டப் பேரவைக் கூட்டம்? - சபாநாயகர் முக்கிய முடிவு என தகவல்!
- Namvazhvu Tube
- Sep 1, 2020
- 1 min read

தமிழக சட்டமன்றம் ஆறு மாத காலத்துக்கு ஒரு முறை கூட்டப்பட வேண்டும். இந்த காலக்கெடு வருகிற 23ம் தேதியுடன் நிறைவடைய உள்ளது. எனவே, அதற்கு முன்னதாக சட்டப் பேரவையைக் கூட்ட சபாநாயகர் தனபால் தீவிர ஆலோசனை நடத்தி வருகிறார். தற்போதைய நிலையில் புனித ஜார்ஜ் கோட்டை வளாகத்தில் உள்ள சட்டப் பேரவையில் கூட்டத்தைக் கூட்டுவது சரியாக இருக்காது என்பதால், வேறு இடங்களில் கூட்டம் நடத்துவது தொடர்பாக ஆய்வு செய்யப்பட்டது. சென்னை கலைவாணர் அரங்கில் கூட்டம் நடத்துவது தொடர்பாக நேரில் சென்றும் ஆய்வு செய்யப்பட்டது.
Source: https://m.dailyhunt.in/news







Comments