நீட் தேர்வு கொரோனா பரவலுக்கு வழிவகுக்கும்! - டாக்டர் ராமதாஸ் எச்சரிக்கை
- Namvazhvu Tube
- Aug 28, 2020
- 1 min read

நுழைவுத் தேர்வு என்ற பெயரில் 25 லட்சம் மாணவர்களை ஆங்காங்கே கூட்டுவது கொரோனா நோய்ப் பரவலுக்கு வழிவகுத்துவிடும் என்று பா.ம.க நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.இந்த சூழ்நிலையில் நீட் தேர்வு நடைபெறும் என்று அரசு உறுதியாக அறிவித்துள்ளது.இதற்கு எதிர்ப்பு தெரிவித்து டாக்டர் ராமதாஸ் ட்வீட் வெளியிட்டுள்ளார். அதில், “இந்தியாவில் தினசரி கொரோனா தொற்றுகளின் எண்ணிக்கை இன்று 77,266 ஆக உயர்ந்திருக்கிறது. அடுத்த சில நாட்களில் இந்த எண்ணிக்கை புதிய உச்சங்களை எட்டக் கூடும். இத்தகைய சூழலில் நீட் மற்றும் ஐஐடி நுழைவுத் தேர்வுகளை நடத்துவது சரியாக இருக்காது.
Source: https://m.dailyhunt.in/news







Comments