top of page

தமிழகத்தில் நாளை தனியார் பேருந்துகள் இயக்கப்படாது!


தமிழகத்தில் நாளை தனியார் பேருந்துகள் இயக்கப்படாது என்று தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இது குறித்து திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்த தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்க மாநில செயலாளர் தர்மராஜ், ‘மாவட்டத்திற்குள் மட்டுமே இயக்கினால் லாபம் கிடைக்காது என்றும் மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல அனுமதி தந்தால் மட்டுமே தனியார் பேருந்துகள் இயக்கப்படும் என்றும் கூறியுள்ளார். 50% இருக்கைகள் என்றில்லாமல் இருக்கைகள் அனைத்தையும் பயன்படுத்த அனுமதிக்க வேண்டும் என்றும் தனியார் பேருந்து உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Comments


bottom of page