top of page

தமிழகத்தில் இன்று முதல் 11-ம் வகுப்பு மாணவர் சேர்க்கை தொடங்கியது...


சமீபத்தில்1-ம் வகுப்பு, 6-ம் வகுப்பு, 9-ம் வகுப்பு மாணவர்கள் புதிதாகச் சேர்க்கப்பட்டனர்.

இன்று காலை முதல் அனைத்து பள்ளிகளிலும் பிளஸ் 1 மாணவர் சேர்க்கை தொடங்குகிறது என்றும் அனைத்து பள்ளிகளிலும் உள்ள நிர்வாகிகள் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளையும் அரசின் வழிகாட்டு நெறி முறைகளையும் பின்பற்ற வேண்டும் என்று கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.

அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி மாணவர் சேர்க்கை நடத்த தலைமையாசிரியர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.இதற்கிடையே, என்ஜினீயரிங், பாலிடெக்னிக் படிப்புகளில் சேர சான்றிதழ்களை பதிவேற்ற இன்று கடைசிநாள் ஆகும்.

சான்றிதழ் பதிவேற்றம் செய்தபின்பு, ரேண்டம் எண் வெளியிடப்படும். அதுகுறித்த அறிவிப்பை உயர்கல்வித்துறை இன்று தெரிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Comments


bottom of page