தென்காசி மாவட்டத்தில் வெப்பம் அதிகரிப்பு: பொதுமக்கள் கடும் அவதி
- Namvazhvu Tube
- Aug 27, 2020
- 1 min read

இந்த ஆண்டில் கடந்த ஜூன் மாதம் 2-ம் தேதி தென்மேற்கு பருவமழை தொடங்கியது.இருப்பினும் போதிய மழை பெய்யவில்லை. ஜூன், ஜூலை மாதங்களில் தென்மேற்கு பருவமழை ஏமாற்றம் அளித்தது. இதனால், விவசாயிகள் சாகுபடி பணியை மேற்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டது.
இந்நிலையில், ஆகஸ்ட் மாத தொடக்கத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்தது. மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் பெய்த தொடர் மழையால், மாவட்டத்தில் உள்ள 5 அணைகளும் வேகமாக நிரம்பின.
இந்நிலையில், கடந்த 15 நாட்களாக தென்மேற்கு பருவமழை ஏமாற்றம் அளித்து வருகிறது.
Source: https://m.dailyhunt.in/news







Comments