'சென்னையில் அதிகளவில் தற்கொலை'.. 2ஆவது இடத்தில் தமிழகம்; ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்!
- Namvazhvu Tube
- Sep 2, 2020
- 1 min read

குற்ற ஆவண காப்பகம் அதிர்ச்சி தரும் தகவலை தெரிவித்துள்ளது.
கடந்த சில ஆண்டுகளாக கொலை, கொள்ளை, தற்கொலை என அதிர்ச்சியூட்டும் சம்பவங்கள் நடந்து வருகின்றன. குறிப்பாக கொலைகளும், தற்கொலைகளும் அதிகமாக நடக்கிறது என்றே கூறலாம். பாடம் புரியவில்லை, தேர்வில் தோல்வி என மாணவர்களும், குடும்ப பிரச்னையில் கணவன் மனைவிகளும், மன அழுத்தத்தால் இளைஞர்களும் தற்கொலை செய்து கொள்வது வாடிக்கையாகி வருகிறது. தற்போது கூட ஆன்லைன் பாடம் புரியாததால் மாணவர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.பிரச்னைக்கு முடிவு தேடுவதற்கு பதிலாக, தனது வாழக்கையையே முடித்து கொள்ள நினைக்கும் நபர்களுக்கு உதவி புரிய பல ஹெல்ப் லைன் எண்கள் நடைமுறையில் இருக்கின்றன.
Source: https://m.dailyhunt.in/news







Comments