top of page

சென்னையில் 2 மருத்துவமனைக்கு கொரோனா தடுப்பூசியை பரிசோதிக்க அனுமதி.!


சமீபத்தில் ஆஸ்ட்ரா ஜெனிகா நிறுவனம் மற்றும் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் இணைந்து உருவாக்கிய தடுப்பு மருந்தை, இந்தியாவில் தயாரிக்க புனேவில் உள்ள சீரம் இன்ஸ்டிட்யூட்டுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இந்த மருந்தை இந்தியாவில் மனிதர்களிடம் பரிசோதனை செய்ய 17 மருத்துவமனைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த தடுப்பு மருந்தின் 2-ஆம் கட்ட சோதனை பாரதி வித்யாபீடம் மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனையில் இன்று தொடங்குகிறது.

இந்நிலையில் சென்னையைச் சேர்ந்த ராஜீவ் காந்தி மருத்துவமனை மற்றும் ராமச்சந்திர மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தடுப்பூசி சோதனைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

Comments


bottom of page