சாத்தான்குளம்: 17, 13 இடங்களில் கடுமையான காயங்கள்! அதிரவைத்த உடற்கூராய்வு அறிக்கை
- Namvazhvu Tube
- Aug 26, 2020
- 1 min read

``சாத்தான்குளத்தில் தந்தை - மகன் உயிரிழந்த சம்பவத்தில் அவர்கள் மரணத்துக்கு உடலில் இருந்த கடுமையான காயங்களே காரணம். ஜெயராஜ் உடலில் 17 இடங்களிலும், பென்னிக்ஸ் உடலில் 13 இடங்களிலும் கடுமையான காயங்கள் இருந்ததாக உடற்கூராய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கு தொடர்பாக சிபிசிஐடி 60 பேரையும், சிபிஐ 35 பேரையும் இதுவரை விசாரித்துள்ளது. சிபிஐ-யின் விசாரணை இன்னும் முடியவில்லை. அதனால் குற்றவாளிகளுக்கு ஜாமீன் வழங்கக் கூடாது" என்று குறிப்பிட்டிருந்தனர்.அதைத்தொடர்ந்து சிபிஐ தரப்பில் முழுமையான அறிக்கை தாக்கல் செய்த பின் ஜாமீன் மனுக்கள் விசாரிக்கப்படும் என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
Source: https://www.vikatan.com/







Comments