கரூர்: `500 பனைவிதைகள் விதைச்சாச்சு; 2,500 விதைகள் ரெடி' - களமிறங்கிய நாம் தமிழர் கட்சியினர்
- Namvazhvu Tube
- Aug 18, 2020
- 1 min read

'வருங்காலச் சந்ததியினருக்கு, குளித்தலைப் பகுதியைச் சுற்றி பார்க்கும் இடங்களில் எல்லாம் பனைமரங்களைப் பார்க்கும் பாக்கியத்தை ஏற்படுத்துவதே, எங்களின் இந்தத் தொடர் பனைவிதை விதைக்கும் முயற்சியின் நோக்கம்.’
வறட்சிமிகு பகுதியான தோகைமலையில் உள்ள பெரிய குளத்தில், பசுமையான சூழலைக் கட்டமைக்க ஏதுவாக, 400 பனைவிதைகளை விதைத்து அசத்தியிருக்கிறார்கள், நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த இளைஞர்கள்.

கரூர் மாவட்டம், குளித்தலை ஒன்றியத்தில் இருக்கிறது தோகைமலை. மிகவும் பின்தங்கியப் பகுதியான இந்தப் பகுதியில் இருக்கும் நீர்நிலைதான் பெரிய குளம். தோகைமலை பகுதியில் சரிவர மழை பெய்யாத காரணத்தால், இந்தப் பெரிய குளம் பெரும்பாலும் வறண்டே கிடக்கும்.
source:https://www.vikatan.com/news







Comments