கரோனா வைரஸ்: இந்தியாவில் உயிரிழப்பு 60 ஆயிரத்தை நெருங்குகிறது! ஒரே நாளில் 1059 பேர் பலி!
- Namvazhvu Tube
- Aug 26, 2020
- 1 min read

நேற்று மட்டும் 1059 பேர் உயிரிழந்துள்ளனர். நாடு முழுவதும் கரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 67 ஆயிரத்து 751 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து பாதிக்கப்பட்டவர்களின் என்ணிக்கை 32 லட்சத்து 34 ஆயிரமாக உயர்ந்துள்ளது. அதேபோல இதுவரை 24 லட்சத்து 67 ஆயிரம் பேர் குணமடைந்துள்ளனர். நேற்று மட்டும் 66 ஆயிரம் பேர் குணமடைந்துள்ளனர்.
மருத்துவமனைகளில் 7 லட்சத்து 7 ஆயிரம் பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். உயிரிழப்பு விகிதம் 1.83% ஆக உள்ளது. ஐசிஎம்ஆர் தகவலின் படி இதுவரை 3 கோடியே 76 லட்சம் பேருக்கு மேல் கரோனா பரிசோதனை மேற்கொண்டுள்ளனர்.
Source: https://m.dailyhunt.in/news







Comments