top of page

கர்நாடகத்தில் புதிய கல்விக் கொள்கையை அமல்படுத்தி திருத்தங்கள் செய்ய அரசு தயார் - அஸ்வத் நாராயண்


கர்நாடக உயர் கல்வித்துறை மந்திரியும், துணை முதல்-மந்திரியுமான அஸ்வத் நாராயண், பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய பா.ஜனதா அரசு புதிய தேசிய கல்விக் கொள்கையை அமல்படுத்தி உள்ளது. இந்த தேசிய கல்விக் கொள்கையை அமல்படுத்தும் முதல் மாநிலமாக கர்நாடகம் இருக்கும் என்பதை இந்த சந்தர்ப்பத்தில் தெரிவித்து கொள்கிறேன். அதற்கு தேவையான அனைத்து விதமான நடவடிக்கைகளையும் அரசு எடுத்து வருகிறது. இந்த புதிய கல்விக் கொள்கை கர்நாடகத்திற்கு மட்டுமின்றி, நாடு முழுவதும் புதிய மாற்றத்தை ஏற்படுத்தும் என்று கூறினார்.

Comments


bottom of page