கீழடுக்கு சுழற்சியால் இந்த 5 மாவட்டங்களில் மழை பெய்யும்!
- Namvazhvu Tube
- Aug 29, 2020
- 1 min read

தமிழகத்தில் பருவமழை துவங்கியுள்ளதால் தென் மாவட்டங்கள் உள்ளிட்ட பல இடங்களில் ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. இதனால் வெயிலின் தாக்கம் குறைந்து குளிர்ச்சியான சூழல் நிலவுகிறது.
இந்நிலையில் கீழடுக்கு சுழற்சியால் கோவை, நீலகிரி, மதுரை, திண்டுக்கல் மற்றும் தேனி மாவட்டத்தல் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் சில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் கூறியுள்ளது.அதிகபட்சமாக மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் 5 சென்டி மீட்டர் மழை பதிவாகி உள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
Source: https://m.dailyhunt.in/news







Comments