top of page

கொரோனா பாதிப்பால் 1,400 பேரைப் பணிநீக்கம் செய்வதாக ஓலா நிறுவனம் அறிவித்துள்ளது.



இந்தியாவில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் விதமாக நாடு முழுவதும் மார்ச் 25ஆம் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட போது பொதுமக்களுக்கான பொதுப் போக்குவரத்துச் சேவைகள் அனைத்தும் நிறுத்தப்பட்டன. ஓலா, உபேர் உள்ளிட்ட டாக்ஸி போக்குவரத்தும் முடங்கியது.மே மாத இறுதியில் ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்ட நிலையில் டாக்ஸி சேவை மீண்டும் தொடங்கியது. மீண்டும் டாக்ஸிகள் இயங்கினாலும் போதிய அளவு வருவாய் கிடைக்கவில்லை. மறுபுறம் செலவுகளும் அதிகரித்து வருவதால் வேறு வழியில்லாமல் ஊழியர்களின் சம்பளத்தைக் குறைப்பது வேலையை விட்டு நீக்குவது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டது.

இந்நிலையில் செலவுகளைக் குறைக்கும் நோக்கத்தில் 1,400 பேரைப் பணிநீக்கம் செய்வதாகத் தெரிவித்துள்ளது. அதாவது இந்தியாவில் தனது ஊழியர் படையில் கிட்டத்தட்ட 35 சதவீதப் பேரை இந்நிறுவனம் பணிநீக்கம் செய்துள்ளது. இதுகுறித்து ஊழியர்களுக்கு மின்னஞ்சல் வழியாக தகவல் அனுப்பப்பட்டுள்ளது. கடந்த இரண்டு மாதங்களில் மட்டும் ஓலா நிறுவனத்துக்கு 95 சதவீதம் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. இந்தியாவைப் பொறுத்தவரையில், உணவு டெலிவரி டாக்ஸி போக்குவரத்துச் சேவைகள்தான் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக ஓலா நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.




Comments


bottom of page