காட்டு யானையால் சுற்றுச்சுவர் சேதம்
- Namvazhvu Tube
- Aug 31, 2020
- 1 min read

மூணாறு:மூணாறில் அரசு தொழில் பயிற்சி மேல் நிலை பள்ளியின் சுற்றுச் சுவரை காட்டு யானை சேதப்படுத்தியது.கொரோனா ஊரடங்கு அமல் படுத்தப்பட்ட பிறகு மூணாறில் காட்டு யானைகள் நடமாட்டம் அதிகரித்துஇரவில் நகருக்குள் வலம் வருவது வழக்கமாகி விட்டது. சில நாட்களாக நகரைச் சுற்றிநடமாடி வரும் ஆண் காட்டு யானை நேற்று முன்தினம் இரவு பழைய மூணாறில் சுற்றித்திரிந்தது. அங்கு அதிகாலை 3:00 மணிக்கு சுற்றித்திரிந்தபோது, அந்த வழியில் வந்த லாரிக்கு வழி விட முயன்ற யானை அரசு தொழில் பயிற்சி மேல் நிலை பள்ளியின் சுற்றுச் சுவரை சேதப் படுத்தியது. காட்டு யானைகளால் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
Source: https://m.dailyhunt.in/news




Comments