top of page

எதற்காக இபாஸ்: முதல்வர் இபிஎஸ் விளக்கம்


இ - பாஸ் இருப்பதால் தான் யார் யார் எங்கு செல்கிறார்கள் என்பதை அறிந்து கொள்ள முடிகிறது.நோய் தொற்று ஏற்படுத்தும் பகுதிகளுக்கு நடமாடும் பரிசோதனை வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. தடுப்பு மருந்து இல்லாமல், டாக்டர்கள் சிறப்பாக செயல்பட்டு நோய் தொற்றை குணப்படுத்துகின்றனர்.சிறப்பு குறைதீர்க்கும் திட்டம் தமிழகம் முழுவதும் சிறப்பாக செயல்படுத்தப்படுகிறது. முதியோர் உதவித்தொகை திட்டம், வீட்டு மனை திட்டம், குடிமராமத்து திட்டம், கூட்டு குடிநீர் திட்டம் உள்ளிட்ட பணிகள் கடலூரில் சிறப்பாக செயல்படுகிறது. கடலூரில் காய்ச்சல் முகாம் மூலம் 3.25 லட்சம் பேர் பயனடைந்துள்ளனர். மகளிர் சுய உதவி குழுக்களுக்கு ரூ.1,114 கோடி கடனுதவி அளிக்கப்பட்டுள்ளது என்றார்.

Comments


bottom of page