top of page

ஊதிய குறைப்பு உள்ளிட்டவற்றுக்கு எதிர்ப்பு தெரிவித்து, சென்னையில் ஸ்விக்கி (swiggy) ஊழியர்கள்


ஊதிய குறைப்பு உள்ளிட்டவற்றுக்கு எதிர்ப்பு தெரிவித்து, சென்னையில் ஸ்விக்கி ((swiggy)) ஊழியர்கள் திடீர் தர்ணாவில் ஈடுபட்டனர். முன்பு ஒவ்வொரு ஆர்டரிலும் தலா 40 ரூபாய் ஊதியம் வழங்கப்பட்டதாகவும், படிப்படியாக அது 15 ரூபாயாக குறைக்கப்பட்டு விட்டதாகவும் இதனால் நாள்வருமானம் 750 ரூபாயிலிருந்து 300 ரூபாயாக குறைந்து விட்டதாகவும் குற்றம்சாட்டி ஸ்விக்கி ஊழியர்கள், முதலமைச்சரின் சிறப்பு தனி பிரிவில் புகார் அளித்தனர். பின்னர் ராஜாஜி சாலையில் உள்ள ரயில்வே சுரங்க பாதையில் சுமார் 200 பேர் தர்ணாவில் ஈடுபட்டனர்.


காவல்துறையினர் பேச்சு நடத்தியதையடுத்து தர்ணாவை கைவிட்டு அவர்கள் கலைந்து சென்றனர். இந்நிலையில் ஸ்விக்கி வெளியிட்ட விளக்கத்தில், ஆர்டருக்கு 15 ரூபாய் வழங்கப்படுகிறது என்ற தகவல் தவறு எனவும், இந்த வாரத்தில் பெரும்பாலானோர் ஆர்டருக்கு 45 ரூபாய்க்கும் அதிகமாக பெற்றனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சர்வீஸ் கட்டணம் என்பது பயண தூரம், காத்திருப்பு நேரம் உள்ளிட்டவற்றை அடிப்படையாக வைத்தே அளிக்கப்படுகிறது எனவும் கூறியுள்ளது


Comments


bottom of page