top of page

உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு எதிர்ப்பு; ஸ்டெர்லைட் நிறுவனம் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு!


தூத்துக்குடி மாவட்டத்தில் நிறுவப்பட்ட ஸ்டெர்லைட் ஆலையை எதிர்த்து நடைபெற்ற போராட்டத்தில் 13 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்த சம்பவம் பூதாகரமாக உருவெடுத்ததால் ஸ்டெர்லைட் ஆலைக்கு தமிழக அரசு சீல் வைத்தது.அந்த வழக்கின் தீர்ப்பு கடந்த சில நாட்களுக்கு முன்னர் வெளியானது.இதனைத்தொடர்ந்து ஸ்டெர்லைட் எதிர்ப்பு இயக்கம், மதிமுக, தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த நிலையில் ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதற்கான தடை தொடரும் என்ற உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து வேதாந்தா நிறுவனம் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது. இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Comments


bottom of page