top of page

உடல்நலக் குறைவு. ஜப்பான் பிரதமர் ராஜினாமா செய்ய முடிவு


ஜப்பான் பிரதமராக ஷின்சோ அபே உள்ளார். அவர் தன்னுடைய பதவியை உடல்நலக் குறைவு காரணமாக ராஜினாமா செய்ய விருப்பம் தெரிவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த தகவலை ஜப்பான் நாடாளுமன்றத்தின் ஆளுங்கட்சியான லிபரல் டெமாக்ரடிக் பார்ட்டி தலைமைச் செயலாளர் ஹிரோஷிஜி சீகோ உறுதி செய்துள்ளார் என்றும் கூறப்பட்டுள்ளது.

இது தொடர்பாக விரைவில் பிரதமர் அபே பத்திரிகையாளர்களை சந்தித்து தன்னுடைய முடிவை அறிவிப்பார்.

Comments


bottom of page