top of page

உங்கள் வாகன உரிமம், ஓட்டுநர் உரிமம் இந்தாண்டு காலாவதி ஆகிறதா..??? கவலை வேண்டாம்.


வாகன ஓட்டுநர் உரிமம், வாகன உரிமம் உள்ளிட்ட போக்குவரத்து சார்ந்த ஆவணங்கள் தற்போது காலாவதி ஆகிறது என்றால் கவலை வேண்டாம் என மத்திய சாலைப்போக்குவரத்து அமைச்சகம் கூறியது. கொரோனா ஊரடங்கால் கூட்டம் கூடுவதை தவிர்க்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நிலையில் RTO சார்ந்த பணிகளுக்கு வட்டாரப்போக்குவரத்து அலுவலகங்களில் கூட்டம் கூடுவதாக புகார்கள் எழுந்தன. இந்நிலையில் இந்தாண்டு காலாவதி ஆகும் உரிமங்கள், சான்றிதழ்களை இந்தாண்டு டிசம்பர் 31 ஆம் தேதி வரை பயன்படுத்திக் கொள்ளலாம் என சாலைப் போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Comments


bottom of page