top of page

ஈரோடு மாவட்டத்தில் பொது ஊரடங்கை மீறியதாக 156 வழக்குகள் பதிவு


நேற்று 4 – வது ஞாயிற்றுக்கிழமை என்பதால் பொது ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டது. ஈரோடு மாவட்டத்திலும் பொது ஊரடங்கு

கடைப்பிடிக்கப்பட்டது இதையடுத்து பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன முக்கியமான சாலைகள் எப்போதும் பரபரப்பாக காணப்படும் பகுதிகள் அனைத்தும் மக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடி காணப்பட்டன.ஒரு சிலர் தடை உத்தரவை மீறி கடையை திறந்து வைத்தனர் நேற்று ஈரோடு மாநகர் பகுதியில் தடையை மீறி திறந்து வைத்திருந்த 4 இறைச்சி கடைகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. இவ்வாறாக நேற்று ஒரே நாளில் மாவட்டம் முழுவதும் ஊரடங்கு மீறியதாக 156 வழக்குகளை போலீசார் பதிவு செய்தனர்.

Comments


bottom of page