இந்தியாவில் 44 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு ஆகஸ்டில் 25% கூடுதல் மழை!
- Namvazhvu Tube
- Aug 29, 2020
- 1 min read

ஆகஸ்ட் மாதம் 28ஆம் தேதி வரையிலான காலகட்டத்தை கணக்கிடுகையில் இந்த மாதத்தில் பெய்ய வேண்டிய பருவ மழையை விட 25 சதவீதம் கூடுதலாக பெய்துள்ளது. அதாவது ஆகஸ்ட் மாதத்தில் பருவ மழை 23.8 சதவீதம் கூடுதலாக பெய்தது தான் இது வரையிலான காலகட்டங்களில் அதிகபட்ச மழையாக இருந்தது.
ஆனால் இந்த வருடம் மற்ற வருடங்களை விட 28.5% அதிகரித்து, கூடுதலாக பெய்துள்ளது. மேலும் இந்த ஆண்டு பீகார்,, ஆந்திரா தெலுங்கானா, தமிழ்நாடு, குஜராத் மற்றும் கோவா ஆகிய பகுதிகளில் அதிக அளவு மழை பதிவாகியுள்ளது. பல இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது, கடந்த ஆண்டை காட்டிலும் நாடு முழுவதும் உள்ள அணைகள் நீர்த்தேக்கங்கள் இந்த ஆண்டு சிறப்பாக நிரம்பி வழிந்து உள்ளதாக மத்திய நீர்வள ஆணையம் தெரிவித்துள்ளது. அதுபோல கடந்த ஜூன் மாதத்தில் 17 சதவீதம் கூடுதல் மழையும் ஜூலை மாதத்தில் 10 சதவீதம் கூடுதல் மழையும் பெய்துள்ளது.
Source: https://m.dailyhunt.in/news







Comments