top of page

இந்த 9 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்!


வளிமண்டல சுழற்சி மற்றும் வெப்பச்சலனத்தால் சேலம், கரூர், நீலகிரி, திண்டுக்கல், தேனி, மதுரை, சிவகங்கை, விருதுநகர் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் சென்னையை பொறுத்தவரை வானம் மேக மூட்டத்துடன் காணப்படும், ஒரு சில இடங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவித்துள்ளது. அதே போல அதிகபட்சமாக மாரண்டஹள்ளி மற்றும் ராயக்கோட்டையில் 9 செமீ மழை பெய்துள்ளதாகவும் சமயபுரத்தில் 6 செமீ மழை பதிவாகியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது.மேலும் ராமநாதபுரம் மற்றும் தனுஷ்கோடி பகுதியில் அலை 1.9 மீ முதல் 2.9 மீ வரை எழும்பும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

Comments


bottom of page