top of page

ஆறு ஆண்டுகளாக செயல்படாமல் இருந்த அபயாரண்யம் முகாம் மீண்டும் தொடக்கம்


நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்தில் தெப்பக்காடு,பாம்பேக்ஸ், ஈட்டி மரம் ஆகிய மூன்று முகாம்களில் 27 வளர்ப்புயானைகள் பராமரிக்கப்படுகின்றன. ஆறு ஆண்டுகளுக்கு முன்பு தெப்பக்காடு, அபயாரண்யம் ஆகிய 2 இடங்களில் முகாம்கள் செயல்பட்டன.அபயாரண்யம் யானைகள் முகாம் பிரதான சாலையோரத்தில் இருப்பதால், அந்த வழியாக வரும் சுற்றுலாப் பயணிகள் வாகனங்களை நிறுத்தி, எந்தவித அனுமதியும் இன்றி முகாம்களுக்கு வருவதை தடுக்க முடியாத நிலை ஏற்பட்டது.

தற்காலிகமாக இருந்த ஈட்டி மரம் முகாமும் மூடப்பட்டது. இதையடுத்து, அனைத்து யானைகளும் தெப்பக்காடு முகாமுக்கு கொண்டுவரப்பட்டன. மீண்டும் அபயாரண்யம் முகாமில் யானைகளை பராமரிக்க வனத்துறையினர் நடவடிக்கை மேற்கொண்டனர்.


Comments


bottom of page