ஆசிரியர் தகுதித் தேர்வு மீண்டும் எழுதியாக வேண்டும்! - செங்கோட்டையன் அறிவிப்பு
- Namvazhvu Tube
- Sep 1, 2020
- 1 min read

2013 டெட் ஆசிரியர் தேர்வில் வெற்றி பெற்றவர்கள் மீண்டும் தற்போது தேர்வு எழுத வேண்டும் என்று அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்துள்ளார்.அரசு அல்லது தனியார் பள்ளிகளில் ஆசிரியர் பணியில் சேருபவர்கள் டெட் (டி.இ.டி) எனப்படும் ஆசிரியர் தகுதித் தேர்வை எழுதி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டது.அதுவும் ஒரு முறை தேர்ச்சி பெற்றால் அது ஏழு ஆண்டுகள் வரை மட்டுமே செல்லுபடியாகும் என்று அதில் கூறப்பட்டு இருந்தது. கடந்த 2013ல் டெட் தேர்வு எழுதி வெற்றி பெற்ற பல ஆசிரியர்களுக்கு இன்னும் அரசுப் பணிகள் வழங்கப்படவில்லை. இதனால், டெட் தேர்வில் பெற்ற வெற்றியை நிரந்தரமாக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டது.
Source: https://m.dailyhunt.in/news







Comments