top of page

அருந்ததியினருக்கு உள்ஒதுக்கீடு உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பு


சென்னை: 2009ல் தமிழக அரசு அருந்ததியர் சமூகத்துக்கு மூன்று சதவீதம் உள்ஒதுக்கீடு வழங்கி சட்டம் இயற்றியது. இதை எதிர்த்து, ஐகோர்ட்டில் வழக்கு தொடுக்கப்பட்டது. இந்நிலையில், உச்ச நீதிமன்றத்தில் ஏற்கனவே இடஒதுக்கீடு முறை தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட, ரிட் மனுக்கள் நிலுவையில் உள்ளதால், கிருஷ்ணசாமி மற்றும் சரவணகுமார் தாக்கல் செய்த மனுக்களை, உச்ச நீதிமன்றமே விசாரிக்க வேண்டும் என யசோதா என்பவர் உச்ச நீதிமன்றத்தில் மனு செய்தார். இதன் மீதான தீர்ப்பு ஒத்திவைத்தது. இந்த வழக்கில் உச்ச நீதிமன்ற நீதிபதி அருண்மிஸ்ரா தலைமையிலான ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு இன்று தீர்ப்பு வழங்குகிறது.

Comments


bottom of page