top of page

அதிரடியை கையில் எடுக்கும் சென்னை காவல்துறை.. பதறும் ரவுடிகள்.!!


சென்னை அண்ணாநகர் காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில், பல்வேறு வழக்குகளில் தேடப்பட்டு வந்த நபர் ரவுடி ராதாகிருஷ்ணன்.இவரை கூட்டாளிகளுடன் காவல்துறையினர் நேற்று கைது செய்துள்ளனர். இந்த நிலையில், அரும்பாக்கம் வள்ளுவர் நகரில் நேற்று மாலை பிரபல ரவுடி பதுங்கி இருப்பதாக தகவல் கிடைத்த நிலையில், அங்கு அரும்பாக்கம் காவல் ஆய்வாளர் சங்கர் தலைமையிலான காவல்துறையினர் சென்றுள்ளனர்.

பின்னர் ரவுடியை சுற்றிவளைத்த நிலையில், ரவுடி தான் வைத்திருந்த கத்தியால் காவல் ஆய்வாளரை வெட்டி விட்டு தப்ப முயன்றுள்ளான். காவல்துறையினர் சாமர்த்தியமாக ரவுடியை மடக்கி பிடித்து கைது செய்தனர்.

பின்னர் அவனிடம் மேற்கொண்ட விசாரணையில், இவன் அரும்பாக்கத்தை சார்ந்த ரவுடி உமர் என்ற குமார் பாட்ஷா (வயது 24) என்பதும், ரவுடி ராதாகிருஷ்ணன் கூட்டாளி என்பதும் தெரியவந்துள்ளது.


Comments


bottom of page