top of page
Search

திருச்சி- கொள்ளிடம் ஆற்றில் குளிக்க சென்றவர் நீரில் மூழ்கி பலி


திருச்சி மாவட்டம் பாலக்கரை பகுதியை சேர்ந்தவர் சம்சுதீன். இவரின் மகன் காதர் மொய்தீன் (வயது 13) நண்பர்களோடு கொள்ளிடம் ஆற்றில் குளிக்க சென்றுள்ளார்.அப்போது எதிர்பாராத விதமாக நீரில் மூழ்கினார்.அவரை அவருடைய நண்பர்கள் காப்பாற்ற முயற்சித்தும் அந்த முயற்சி பலனளிக்கவில்லை. நீரில் மூழ்கிய காதர் மொய்தீன் உயிரிழந்தார்.அவரின் உடலை தீயணைப்பு துறையினர் இன்று மீட்டனர்.உடல் பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது

 
 
 

Comments


bottom of page